/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் தேரோட்டம்
/
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவிலில் தேரோட்டம்
ADDED : ஆக 02, 2024 10:57 PM

பண்ருட்டி, -பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் திருத்தேர் உற்சவத்தில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் திருத்தேர், செடல் உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு கெடிலம் அம்மன் கரகம் புறப்பட்டு கோவிலுக்கு பகல் 12:00 மணிக்கு வந்தடைந்தது.
பின் பக்தர்களின் வேண்டுதல் செடல் உற்சவம், பிற்பகல் 3:00 மணிக்கு திருத்தேர் புறப்பாடு நடந்தது.திருத்தேரில் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆயிரக்கனக்கான பக்தர்கள் திருத்தேர் விழாவில் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.
மாலை 4 மணிக்கு திருத்தேர் வலம் வந்து திருத்தேர் நிலையை வந்தடைந்தது. இரவு உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது. விழாவில் நகராட்சி சேர்மன் ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.சி.,சிவராமன், அ.தி.மு.க.,நகர துணை செயலாளர் மோகன், கவுன்சிலர்கள் சண்முகவள்ளிபழனி, எஸ்.வி.ஜீவல்லர்ஸ் வைரக்கண்ணு, வள்ளி விலாஸ் சரவணன், மீனா ஜீவல்லர்ஸ் தேவராஜ் உள்ளிட்ட ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி டி.எஸ்.பி.பழனி தலைமையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், தீயணைப்பு நிலைய அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.