/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் காட்டுமன்னார்கோவிலில் இறுதிகட்ட பிரசாரம்

ADDED : ஏப் 17, 2024 11:31 PM

காட்டுமன்னார்கோவில் : சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசனுக்கு ஆதரவாக ஓட்டு கேட்டு, காட்டுமன்னார்கோவில்
நகர வீதிகளில் அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். சிதம்பரம் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சந்திரகாசன் நேற்று இறுதிகட்ட பிரசாரத்தை அரியலுாரில் துவங்கினார். தொடர்ந்து குன்னம், ஜெயங்கொண்டம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். மதியம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் முடித்தார்.
பிரசாரத்தில் மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில், மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், முன்னாள் அமைச்சர் தாமோதரன் ஆகியோர் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தனர். காட்டுமன்னார்கோவில், ஓமாம்புலியூர் ரோடு, கச்சேரி தெரு, பஸ் நிலையம், டாணாக்கார தெரு, ரெட்டியார் வீதி, செட்டித்தெரு, பெரியகுளம் மற்றும் நகர பகுதிகளில் வீதியாக சென்று ஓட்டு சேகரித்தனர்.
ஒன்றிய செயலாளர்கள் வாசு முருகையன், சிவக்குமார், நகர செயலாளர்கள் எம்.ஜி.ஆர்.தாசன், சங்கர், ஜெ., பேரவை துணை செயலாளர் பாலமுருகன், நிர்வாகிகள் பாலச்சந்தர், பாரதி, அசோகன், தோத்திரி, வேல்முருகன், சுதாகர், ஜான்போஸ்கோ, கவாஸ்கர், கிருபா சங்கர், பழனிசாமி, ராஜசேகர், பிரம்மதீஸ்வரர், ஜான்சன், செந்தில்குமார், ரவிச்சந்திரன், கார்த்திகேயன் , முருகன், மாணிக்கவேல், மயில் குணசேகரன், சரத்பாபு மற்றும் பலர் உடன் இருந்தனர்.