/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நகர அளவில் வீனஸ் பள்ளி முதலிடம்
/
சிதம்பரம் நகர அளவில் வீனஸ் பள்ளி முதலிடம்
ADDED : மே 07, 2024 04:10 AM

சிதம்பரம் : சிதம்பரம் வீனஸ் பள்ளியில், தேர்வு எழுதிய 240 மாணவர்களும், தேர்ச்சி பெற்று 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
மாணவி அபிராமி, 591 மதிப்பெண் பெற்று நகர அளவில் முதலிடமும், பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். திவ்யதர்ஷிணி 587 பெற்று இரண்டாமிடம், மாணவர் சபரிராஜன் 585 பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளார். தேர்வு எழுதிய 240 மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். 550 க்கு மேல் 44 மாணவர்கள், 500க்கு மேல் 137 பேர் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
கணிதத்தில் 3, இயற்பியல் 1, வேதியியல் 1, உயிரியல் 8, கணினி அறிவியல் 6, வணிகவியல் 7, தாவரவியல், விலங்கிய தலா 1 என, 28 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், உறுதுணையாக இருந்த பெற்றோர்கள், தேர்ச்சி பெற உழைத்த முதல்வர் மற்றும் ஆசிரியர்களுக்கு பள்ளி தாளாளர் குமார், முதல்வர் ரூபியால் ராணி வாழ்த்து தெரிவித்தனர். துணை முதல்வர் நரேந்திரன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.