/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
/
சிதம்பரம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
சிதம்பரம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
சிதம்பரம் அரசு கல்லுாரியில் நாளை 2ம் கட்ட கலந்தாய்வு
ADDED : ஜூன் 23, 2024 05:30 AM
கிள்ளை: சிதம்பரம் அரசு கலைக் கல்லுாரியில், இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை இரண்டாம் கட்ட கலந்தாய்வு நாளை 24ம் தேதி நடக்கிறது.
இதுகுறித்து கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அர்ச்சுனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சிதம்பரம் அரசு கலை கல்லுாரியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான இளநிலை முதலாமாண்டு பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு முடிந்தது.
அதனை தொடர்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு (இணைய வழியில்) விண்ணப்பித்தவர்களுக்கு இனசுழற்சி மற்றும் தரவரிசை அடிப்படையில் நாளை (24ம் தேதி)நடக்கிறது.
அன்றைய தினம் காலை 9:00 மணிக்கு பி.எஸ்.சி., கணிதம் (தமிழ்வழி, ஆங்கிலவழி), இயற்பியல், பொது வேதியியல், கணினிஅறிவியல் சுழற்சி 1, 2. புள்ளியில், பி.எஸ்.ஏ., பயன்பாட்டியல். பி.எஸ்சி., தொழில் வேதியியல் சுழற்சி 1,2.
பி.எஸ்சி., தாவரவியல், விலங்கியல், 25ம் தேதி காலை 9:00 மணிக்கு பி.ஏ., பொருளியில், பி.காம்., சுழற்சி 1,2. பி.பி.ஏ., வணிகநிர்வாகவியல். பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம் சுழற்சி, 1,2. நடக்கிறது.
சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் இணைய வழி விண்ணப்ப நகல் மாற்று சான்றிதழ் அசல் மற்றும் நகல், பத்தாம்,பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியர் கையெப்பம்)6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 அரசு பள்ளிகளில் படித்த சான்று, ஜாதி சான்றிதழ் அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், வங்கி சேமிப்பு கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், இதர சான்றிதழ்கள், போட்டோ, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ் அசல் மற்றும் நகல் உள்ளிட்டவைகளுடன் ஆஜராக வேண்டும்.