/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் காமராஜ் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
/
சிதம்பரம் காமராஜ் பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 07, 2024 03:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் சிதம்பரம் வேங்கான் தெருவில் உள்ள காமராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி பிளஸ் 2 தேர்வில், 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
மாணவி சிவானி 589 மதிப்பெண்கள் பெற்று நகர அளவில் இரண்டாம் இடத்தையும், பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். மாணவர் ஸ்ரீதர 568 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடம், மதுமிதா 563 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் கஸ்தூரி லட்சுமிகாந்தன், பொன்னாடை அணிவித்து பரிசுகள் வழங்கினார். பள்ளி முதல்வர் சக்தி, துணை முதல்வர்கள் ரமேஷ், அம்பிகா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.