/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் தில்லைக்காளி கோவில் தேரோட்டம்
/
சிதம்பரம் தில்லைக்காளி கோவில் தேரோட்டம்
ADDED : ஜூன் 05, 2024 03:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக்காளி கோவில் தேரோட்டம் நடந்தது.
சிதம்பரம் தில்லைக்காளி கோவில் வைகாசி திருவிழா கடந்த மே மாதம் 27ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடந்தது.
31ம் தேதி தெருவடைச்சான் நடந்தது. முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது.
நேற்று காலை தேரில் தில்லையம்மன் எழுந்தருள செய்யப்பட்டு, சிதம்பரம் நகர நான்கு வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று (5ம் தேதி) சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரியும், 8ம் தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.