/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பூதங்குடி அள்ளூரில் முதல்வர் திட்ட முகாம்
/
பூதங்குடி அள்ளூரில் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 29, 2024 11:27 PM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி அள்ளூரில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
சேத்தியாத்தோப்பு அருகே அள்ளூர் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில், சிதம்பரம் தாசில்தார் ஹேமானந்தி குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்தார். கீரப்பாளையம் பி.டி.ஓ., க்கள் மோகன்ராஜ், ஆனந்தன், துணை பி.டி.ஓ., கெஜலட்சுமி, துணை தாசில்தார் புஷ்பராஜ் முன்னிலை வகித்தனர்.
ஊராட்சி தலைவர் ஜெயா, துணை தலைவர் கோமேதகம் ராமகிருஷ்ணன் வரவேற்றனர்.
முகாமில், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
இதில், ஊராட்சி தலைவர்கள் கல்பனா, ராஜ்மோகன், ரவிச்சந்திரன், ஆனந்தி மற்றும் கூளாப்பாடி தொடக்க வேளாண் வங்கி செயலர் சாம்பமூர்த்தி, மின்துறை உதவி செயற்பொறியாளர் பழனிவேல், உதவி பொறியாளர் அம்பேத்கர், தமிழ்மணி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளினி தேன்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சி.சாத்தமங்கலம், வெய்யலுார், வாழைக்கொல்லை, வடப்பாக்கம், ஓடாக்கநல்லுார், ஒரத்துார், தெற்கு விருத்தாங்கன், கூளாப்பாடி, தென்பாதி ஆகிய 10 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமககள் மனு அளித்தனர்.

