/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கீழ்மாம்பட்டு கிராமத்தில் முதல்வர் திட்ட முகாம்
/
கீழ்மாம்பட்டு கிராமத்தில் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 22, 2024 12:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கீழ்மாம்பட்டு கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.
தாசில்தார் ஆனந்த், பி.டி.ஒ.,க்கள் சங்கர், சக்தி முன்னிலை வகித்தனர். ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.
முகாமில் 693 மனுக்கள் வரப்பெற்றன. இதில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு கிட் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. டாக்டர் அறிவொளி, பார்த்தசாரதி, ஒன்றிய கவுன்சிலர்கள் சுந்தரவடிவேல், சந்திரசேகர், ஊராட்சி தலைவர்கள் வசந்தகுமாரிஜெயராமன், லலிதா லட்சுமிநாராயணன், முத்துலிங்கம், ஒன்றிய துணை செயலாளர் குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.