/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குமராட்சி ஒன்றியத்தில் முதல்வர் திட்ட முகாம்
/
குமராட்சி ஒன்றியத்தில் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 29, 2024 07:45 AM

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் 598 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9ஊராட்சிகளை சேர்ந்தபொதுமக்கள் பங்கேற்ற மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம், வல்லம்படுகை அருகே கூடுவெளி ஊராட்சியில் நடந்தது. ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி தலைமை தாங்கினார். ஆத்மா தலைவர் கோவிந்தசாமி, உறுப்பினர் அப்பு சத்தியநாராயணன் முன்னிலை வகித்தனர். குமராட்சி பி.டி.ஓ., சரவணன், காட்டுமன்னார்கோவில் தாசில்தார் சிவக்குமார், முகாமை துவக்கி வைத்தனர்.
கூடுவெலிசாவடி,வடமூர், தெம்மூர்,மெய்யாத்தூர், பரிவிளாகம், ஆட்கொண்டநத்தம், செட்டிக்கட்டளை, டி.புத்துார், நெடும்பூர் ஆகிய 9 ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்றுகோரிக்கை மனுக்களை அளித்தனர். மொத்தம் 598மனுக்கள் பெறப்பட்டது.
முகாமில் ஊராட்சி தலைவர்கள் கோபாலகிருஷ்ணன், செல்வகுமார், வளர்மதி, புஷ்பலதா, குணபாலன், காளிமுத்து, மரியம் ரூத், இளயைசிங்கம் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

