/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வல்லம்படுகை ஊராட்சியில் முதல்வர் திட்ட முகாம்
/
வல்லம்படுகை ஊராட்சியில் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 26, 2024 12:04 AM

சிதம்பரம்: சிதம்பரம் வல்லம்படுகையில், குமராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 10 ஊராட்சி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
குமராட்சி பி.டி.ஓ., சரவணன் ஏற்பாடுகளை செய்தார். ஊராட்சி தலைவர் ஜெயசித்ரா வரவேற்றார். துணை பி.டி.ஓ., இலக்கியா முன்னிலை வகித்தார். சிதம்பரம் தாசில்தார் ஹேமா ஆனந்தி முகாமை துவக்கி வைத்தார்.
மாவட்ட கவுன்சிலர் சந்திரவனம், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரகுமார், சங்கர், நடராஜன், ஊராட்சி தலைவர்கள் தெற்கு மாங்குடி கவுசல்யா, விக்ரமாதித்தன், வடக்கு மாங்குடி தமிழ்ச்செல்வன், கருப்பூர் தர்மராஜா, அத்திப்பட்டு சுகந்தி சரவணன், நலம்புத்தூர் பாஸ்கரன், கிழகுண்டலபாடி சாந்தி பாலகிருஷ்ணன், வையூர் வாசுகி, வல்லம்படுகை ஜெயசித்தா, பெராம்பட்டு சிவாஜி, அகரநல்லூர் கீதாமணி இளங்கோவன் பங்கேற்றனர்.
முகாமில், பொதுமக்களிடம் 700 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, துறை ரீதியாக பிரித்து, கம்யூட்டர் மூலம் பதிவு செய்யப்பட்டு, மக்களுக்கு சான்று வழங்கப்பட்டது.

