/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.177.38 கோடியில் பள்ளி கட்டடங்கள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
/
ரூ.177.38 கோடியில் பள்ளி கட்டடங்கள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
ரூ.177.38 கோடியில் பள்ளி கட்டடங்கள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
ரூ.177.38 கோடியில் பள்ளி கட்டடங்கள் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைப்பு
ADDED : பிப் 22, 2025 09:34 PM
கடலுார் : திருப்பயரில் நடந்த 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாட்டில், 132 அரசு பள்ளிகளில், 177.38 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த திருப்பயரில், 'பெற்றோர்களைக் கொண்டாடுவோம்' 7வது மாநில மாநாடு நடந்தது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த மாநாட்டில் கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில், மாணவர்களுக்கு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள், அவற்றின் செயல்பாடு மற்றும் பயன்கள் விளக்கப்பட்டது. தொடர்ந்து, நபார்டு திட்டத்தில், 27 மாவட்டங்களில், 132 அரசு பள்ளிகளில் 172.55 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை மற்றும் ஆய்வக கட்டடங்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 4.83 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4 கஸ்துார்பா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப்பள்ளி கட்டடங்ளை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர், அரசு பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கிய கொடையாளர்களை கவுரவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் 77 அம்சங்கள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்தமைக்கான தகவல்கள் மற்றும் அறிக்கைகளை கொண்ட மின்புத்தகமான ஒருமைக்கண் செயலி மற்றும் தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள 'அப்பா' செயலி ஆகியவற்றை முதல்வர் தொடங்கி வைத்தார்.

