/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
/
முதல்வர் பிறந்த நாள் விழா நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 02, 2025 04:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா நடந்தது.
ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் காசிராஜன், மாவட்ட பிரதிநிதி ஞானசேகரன், துணை செயலாளர் ராஜேந்திரன், இளைஞரணி மதியழகன் முன்னிலை வகித்தனர்.
கிழக்கு மாவட்ட பொருளாளர் கதிரவன் நலத்திட்ட உதவி வழங்கினார். மாவட்ட பிரதிநிதி அண்ணாதுரை, ஒன்றிய துணை செயலாளர் ஜோதி, வர்த்தக பிரிவு செல்வராசு, விவசாய அணி பாண்டுரங்கன், இலக்கிய அணி வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.