/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., வடக்கு ஒன்றியத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா
/
தி.மு.க., வடக்கு ஒன்றியத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா
தி.மு.க., வடக்கு ஒன்றியத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா
தி.மு.க., வடக்கு ஒன்றியத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா
ADDED : மார் 03, 2025 07:36 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் வடக்கு ஒன்றிய தி.மு.க., மற்றும் இளைஞரணி சார்பில் முதல்வர் பிறந்த நாளையொட்டி, கோணாங்குப்பம் செவித்திறன் குறைவுடையோர் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட இலக்கிய அணி தலைவர் கருணாநிதி, ஒன்றிய துணை செயலாளர் தர்ம மணிவேல், ஒன்றிய பொருளாளர் சாமி, மாவட்ட பிரதிநிதிகள் மதியழகன், பாலகிருஷ்ணன், சிவக்குமார் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் வரவேற்றார்.
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் திருஞானம், பாலபாரதி, வாஞ்சிநாதன், சதீஷ், ஒன்றிய வர்த்தக அணி பரமகுரு, தொழிலாளர் அணி பிரபு, இலக்கிய அணி இளையபெருமாள், விவசாயி அணி பன்னீர்செல்வம், தொண்டரணி கோபால், கிளை செயலர்கள் வெங்கடேசன், தங்கதுரை, மாயவன், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.