/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா
/
சிதம்பரத்தில் முதல்வர் பிறந்தநாள் விழா
ADDED : மார் 04, 2025 06:59 AM

சிதம்பரம்; சிதம்பரம் நகர தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவையொட்டி, நகரமன்ற சேர்மன் செந்தில்குமார் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி, பல்வேறு பகுதிகளில் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
போல் நாராயண தெரு, பேட்டை, வைப்பு சாவடி, கமலிஸ்வரன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த நிகழ்வில் நகரமன்ற சேர்மன் செந்தில்குமார் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், கவுன்சிலர்கள் வெங்கடேசன், அப்பு சந்திரசேகரன், மணிகண்டன், சரவணன், நகரத் துணை செயலாளர்கள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், இளைஞரணி அமைப்பாளர் மக்கள். அருள், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், கவுன்சிலர் லதா மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.