/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
முதல்வர் வருகை எதிரொலி : பிரியாணி விற்பனை 'ஜோர்'
/
முதல்வர் வருகை எதிரொலி : பிரியாணி விற்பனை 'ஜோர்'
ADDED : பிப் 22, 2025 07:24 AM

பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வந்ததால், ஓட்டல்களில் விற்பனை சூடுபிடித்தது.
கடலுார் மாவட்டத்தில் 21, 22ம் தேதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கல், தொழிற்சங்க நிர்வாகிகள் சந்திப்பு, பொதுக்கூட்டம், பெற்றோரை கொண்டாடுவோம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதனால், கடந்த ஒரு வாரமாக உள்ளூர் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி நிர்வாகிகள் ஆங்காங்கே வரவேற்பு நிகழ்ச்சிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
முதல்வர் வருகை காரணாக கிராமங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள், நகரங்களுக்கு வந்து, வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அதுபோல், மேடை அமைத்தல், கொடி நடுதல், வர்ணம் பூசுதல் போன்ற பணியில் நுாற்றுக்கணக்கான ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு காலை முதல் இரவு வரை ஓட்டலில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.
அரசியல் கட்சிகளின் கூட்டம் என்றாலே பிரியாணி வகைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுபோல், முதல்வர் வருகை காரணமாக மதிய வேளைகளில் மதுவும், சிக்கன் பிரியாணியும் தாராளமாக வினியோகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்திற்கு மாறாக ஓட்டல்கள் அனைத்தும் பிசியாக காணப்பட்டது.
மேலும், தி.மு.க., நிர்வாகிகள் தங்களது ஆதரவாளர்களுக்கு தகுந்தாற்போல பிரியாணி மாஸ்டர்களை நியமித்து, தயாரித்து வினியோகம் செய்தனர்.
- நமது நிருபர் -

