/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம்
/
குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம்
ADDED : ஜூலை 10, 2024 04:44 AM

புவனகிரி: புவனகிரி அருகே தலைக்குளம் ஊராட்சி அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் செந்தில்முருகன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் ராமர் வரவேற்றார். துணைத் தலைவர் வேல்முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் துரைமணிராஜன், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரகணேசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கிராமங்களில் கருக் கலைப்பு நடக்காமல் பாதுகாப்பதுடன், குழந்தைகள் பாதுகாப்பை உறுதி படுத்துதல், பள்ளியில் இறுதி வகுப்பு முடித்த மாணவர்களை உயர் கல்வியில் சேர்வதை ஊக்கப்படுத்துவதுடன், மாணவர்கள் இடைநிலை நிறுத்தத்தை முற்றிலும் தடுப்பது, குழந்தை திருமணத்தை கண்காணிப்பது, மது கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனை செய்வது கண்டறிந்தால், போலீஸ் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிப்பது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணரவு ஏற்படுத்தப்பட்டது.
பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சந்திரலேகா, தன்னார்வலர் கிருஷ்ணவேணி ஜெயஸ்ரீ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.