தண்டவாள பராமரிப்பு பணிக்காக சோழன் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்
தண்டவாள பராமரிப்பு பணிக்காக சோழன் எக்ஸ்பிரஸ் வழித்தடம் மாற்றம்
ADDED : ஆக 05, 2026 06:52 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: சென்னை எழும்பூரில் இருந்து கடலுார்–சிதம்பரம் வழியாக திருச்சி செல்லும் ரயில் எண்.22675 சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக வரும் 12, 14, 21, 26 மற்றும் செப்.
2ம் தேதி ஆகிய நாட்களில் மாற்று வழியில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மேற்குறிப்பிட்ட நாட்களில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில், வழக்கமான கடலுார், சிதம்பரம், மயிலாடு துறை பாதைக்கு பதிலாக கடலுார் துறைமுகம்– விருத்தாசலம், அரியலுார், ஸ்ரீரங்கம் வழியாக திருச்சிக்கு இயக்கப்படுகிறது. சிதம்பரம் மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லவில்லை. மாறாக விருத்தாசலம், அரியலுார், லால்குடி, சீனுவாசநல்லுார் ஆகிய ஊர்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
