/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி அருகே இரு தரப்பு மோதல் சாலை மறியல்: போலீஸ் குவிப்பு
/
பண்ருட்டி அருகே இரு தரப்பு மோதல் சாலை மறியல்: போலீஸ் குவிப்பு
பண்ருட்டி அருகே இரு தரப்பு மோதல் சாலை மறியல்: போலீஸ் குவிப்பு
பண்ருட்டி அருகே இரு தரப்பு மோதல் சாலை மறியல்: போலீஸ் குவிப்பு
ADDED : ஆக 04, 2024 04:20 AM

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே சவ ஊர்வலத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.
பண்ருட்டி அடுத்த பாலுார் குயிலாப்பாளையத்தை சேர்ந்த அங்கப்பன் என்பவர் நேற்று இறந்தார். மாலை நடந்த அவரது இறுதி ஊர்வலத்தில் சன்னியாசிப்பேட்டையை சேர்ந்த இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த டி.எஸ்.பி., பழனி தலைமையில் போலீசார் விரைந்து சென்று மோதலை தடுத்தனர். உடன் இருதரப்பினரும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாலை 6:30 மணிக்கு ஒரு தரப்பினர் நடுவீரப்பட்டு-குயிலாப்பாளையம் சாலையிலும், மற்றொரு தரப்பினர் பண்ருட்டி-கடலுார் சாலையில் மறியலில் ஈடுபடடனர்.
அவர்களிடம் போலீசார், தகராறில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று இரு தரப்பினரும் இரவு 8:00 மணிக்கு கலைந்து சென்றனர். இருப்பினும் பதட்டம் நிலவி வருவதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோதல் மற்றும் மறியலால் பள்ளி, கல்லுாரி முடிந்து மாலை வீட்டிற்கு வந்த மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.