/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாசிமக திருவிழாவிற்காக மணிமுக்தாற்றில் துாய்மை பணி
/
மாசிமக திருவிழாவிற்காக மணிமுக்தாற்றில் துாய்மை பணி
மாசிமக திருவிழாவிற்காக மணிமுக்தாற்றில் துாய்மை பணி
மாசிமக திருவிழாவிற்காக மணிமுக்தாற்றில் துாய்மை பணி
ADDED : மார் 06, 2025 02:02 AM

விருத்தாசலம்,:மாசிமக திருவிழாவை முன்னிட்டு, விருத்தாசலம் மணிமுக்தாறு துாய்மை படுத்தும் பணி நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த கோவில் அருகே உள்ள மணிமுக்தாற்றில், மாசிமக தினத்தன்று கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, பெரம்பலுார், அரியலுார் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்பணம் கொடுப்பது வழக்கம்.
இந்நிலையில், வரும் 12ம் தேதி மாசிமக பிரம்மோற்சவம் நடக்கிறது. இந்த தினத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் மணிமுக்தாற்றில் கூடுவர். அதை முன்னிட்டு, விருத்தாசலம் நகராட்சி சார்பில் ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் ஆற்றை சுத்தம் செய்து, சீரமைக்கும் பணி நடந்தது.