தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மூடி கிடக்கும் நுாலகம்

மூடி கிடக்கும் நுாலகம்

மூடி கிடக்கும் நுாலகம்


ADDED : மே 25, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 25, 2026 03:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நெல்லிக்குப்பம்: சரவணபுரத்தில் நூலகத்தை திறக்காததால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சி சரவணபுரத்தில் கடந்த தி.மு.க., ஆட்சியில் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 18 லட்சம் செலவில் நுாலகம் கட்டடம் கட்டப்பட்டது. நீண்ட நாட்களாக நடந்த பணி முடிந்து, கடந்த 3 மாதத்துக்கு முன் சேர்மன் ஜெயந்தி நுாலக கட்டத்தை திறந்து வைத்தார்.

திறப்பு விழா நாள் அன்று சில புத்தகங்கள் படிப்பதற்காக வைக்கப்பட்டன. அடுத்த சில நாட்களில் நுாலகம் பூட்டப்பட்டது. இதுவரை பூட்டியே வைத்திருப்பதால், அப்பகுதி இளைஞர்கள், மாணவ மாணவிகள் அதிருப்தியில் உள்ளனர். பூட்டி கிடக்கும் நுாலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரியுள்ளனர்.

 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us