/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நல்லுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
நல்லுாரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 01, 2024 06:52 AM

வேப்பூர்: நல்லுாரில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடந்தது.
வேப்பூர் அடுத்த நல்லுார் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம், தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., பொது மக்களிடம் மனுக்களை பெற்றார். தொடர்ந்து, சுகாதாரத்துறை சார்பில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
வருவாய், ஊரக வளர்ச்சி, சுகாதாரம், வேளாண், கால்நடை உட்பட்ட 15 துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
நல்லுார் பி.டி.ஓ., சண்முக சிகாமணி, தி.மு.க., நிர்வாகிகள் அன்புக்குமரன், மாரிமுத்தாள் குணா, தனசேகர், ஊராட்சி தலைவர்கள் ராணி முருகேசன், புஷ்பா குமரேசன், உதவியாளர் பாஸ்கர் உடனிருந்தனர்.
மக்களுடன் முதல்வர் முகாமில் 15க்கும் மேற்பட்ட துறை அதிகாரிகள் பங்கேற்றும், ஒரு சில துறைகளில் மட்டுமே பயனாளிகள் கோரிக்கை மனு வழங்கினர். பெரும்பாலான மனுக்கள் சமீபத்தில் நடந்து முடிந்த ஜமாபந்தி, மனுநீதி நாள் முகாமில் பெறப்பட்ட மனுக்களாகும். மற்ற துறைகளில் பயனாளிகளின்றி காலியாக இருந்ததால், அந்தத்துறை அதிகாரிகள் மொபைல் போனில் டைம் பாஸ் செய்தனர். முதல்வர் அறிவித்த சிறப்புத் திட்டம் வெற்றி பெறும் என பயனாளிகளுக்கு அழைப்பு விடும் நிலையில், கண்துடைப்பாக முகாம் நடந்ததா என அதிகாரிகள் புலம்பிச் சென்றனர்.