/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சேமக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
/
சேமக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
ADDED : ஆக 01, 2024 07:03 AM

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை, ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்தார்.
பண்ருட்டி அடுத்த சேமக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று நடந்தது.
ஊராட்சி தலைவர் மணிவண்ணன் வரவேற்றார். பி.டி.ஒ.க்கள் சங்கர், சக்தி, தாசில்தார் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் துவக்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றார். மொத்தம் 1400 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் வேளாண் உதவி இயக்குனர் பார்த்தசாரதி, மருத்துவ அலுவலர் அறிவொளி, துணை பி.டி.ஒ.க்கள் தேன்மொழி, அரிகரசுதன், கண்ணன், துணை தாசில்தார்கள் கிருஷ்ணா, தேவநாதன், பாலமுருகன், ஊராட்சி தலைவர்கள் கலியமூர்த்தி, விஜயலட்சுமி, கலையரசி, குணசுந்தரி, ஆனந்தன், அன்னலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.