/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் அமைச்சர், எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
'மக்களுடன் முதல்வர்' முகாம் அமைச்சர், எம்.எல்.ஏ., பங்கேற்பு
'மக்களுடன் முதல்வர்' முகாம் அமைச்சர், எம்.எல்.ஏ., பங்கேற்பு
'மக்களுடன் முதல்வர்' முகாம் அமைச்சர், எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : மார் 07, 2025 07:12 AM

கடலுார் : கடலுார் ஊராட்சி ஒன்றியம் குட்டியாங்குப்பம் ஊராட்சியில் 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நடந்தது.
அமைச்சர் கோவி செழியன் தலைமை தாங்கி, முகாமை துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். பின், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், 'பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், கூடுதல் கலெக்டர் சரண்யா, ஆர்.டி.ஓ. அபிநயா, தாசில்தார் பலராமன், முன்னாள் ஊராட்சித் தலைவர்கள் கீழ் அழிஞ்சிப்பட்டு வெங்கடேசன், எம்.பி., அகரம் ஞானப்பிரகாசம், மதலப்பட்டு ஜெயமூர்த்தி, மதலப்பட்டு ஊராட்சி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கவுசல்யா பழனிசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.