/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடுவீரப்பட்டில் இன்று மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
/
நடுவீரப்பட்டில் இன்று மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
நடுவீரப்பட்டில் இன்று மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
நடுவீரப்பட்டில் இன்று மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி
ADDED : ஆக 04, 2024 11:59 PM
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டில் இன்று மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடக்கிறது.
நடுவீரப்பட்டு, சி.என்.பாளையம், குமளங்குளம் ஆகிய 3 ஊராட்சிகளுக்கு மக்களுடன் முதல்வர் திட்ட நிகழ்ச்சி இன்று 5ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை வரை நடுவீரப்பட்டு கிருஷ்ணசாமி திருமண மண்டபத்தில் நடக்கிறது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பன்னீர்செல்வம், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். விழாவில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தொழிலாளர் நலத்துறை, மாற்றுதிறனாளிகள் துறை உள்ளிட்ட பல துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கையை மனுவாக கொடுக்கலாம்.