/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூட்டுறவு வங்கி கடன் மேளா; ரூ. 7.52 கோடிக்கு வழங்க முடிவு
/
கூட்டுறவு வங்கி கடன் மேளா; ரூ. 7.52 கோடிக்கு வழங்க முடிவு
கூட்டுறவு வங்கி கடன் மேளா; ரூ. 7.52 கோடிக்கு வழங்க முடிவு
கூட்டுறவு வங்கி கடன் மேளா; ரூ. 7.52 கோடிக்கு வழங்க முடிவு
ADDED : ஜூன் 20, 2024 08:56 PM

வடலுார் : வடலூரில் நடந்த கூட்டுற வங்கி உடனடி கடன் மேளாவில், 7 கோடியே 52 லட்சத்திற்கு கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது.
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில், வடலுார் தனியார் திருமண மண்டபத்தில் உடனடி கடன் மேளா நடந்தது. இதில் வடலூர், குறிஞ்சிப்பாடி, இந்திரா நகர் ,நெய்வேலி மெயின் பஜார், நெய்வேலி வட்டம் 5, வட்டம் 29, மந்தாரக்குப்பம் ஆகிய கிளை வங்கிகள் இணைந்து ஒரே இடத்தில் உடனடி கடன் மேளா நடத்தியது.
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் கோமதி தலைமை தாங்கினார். கடன் மேளாவில் பொதுமக்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு, மகளிர் சுய உதவி குழு கடன், ஊதியம் பெறும் மகளிர் கடன், ஆதரவற்ற கைம்பெண்கள் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறு ,குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் கடன், வீட்டு வசதி கடன், வீடு அடமான கடன், விவசாயம் சார்ந்த மத்திய கால கடன், நாட்டுப்புற கலைஞர்களுக்கான கடன் என, 466 விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. அதில், 7 கோடியே 52 லட்சத்திற்கு உடனடி கடன் வழங்க முடிவு செய்யப்பட்டது. பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் ஒரு வாரத்துக்குள் பரிசீரிக்கப்பட்டு கடன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.