ADDED : ஜூலை 06, 2024 05:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் பி.டி.ஓ., அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைவர் பக்கிரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் அய்யனார், பி.டி.ஓ.,க்கள் இப்ராஹிம், பார்த்திபன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது;
ஞானசவுந்தரி துரை: சங்கொலிக்குப்பம் நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க வேண்டும்.
கிருஷ்ணசாமி; 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தில் அனைவருக்கும் சமமான வேலை பிரித்து கொடுக்க வேண்டும். இதேக்கோரிக்கையை மற்ற கவுன்சிலர்களும், வலியுறுத்தி பேசினர்.
அதற்கு ஒன்றியக்குழு தலைவர் பக்கிரி, கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலனை செய்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அப்போது, ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.