/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநகராட்சி வரி பாக்கி வசூல் தேர்தல் நேரத்திலும் 'ஜரூர்'
/
மாநகராட்சி வரி பாக்கி வசூல் தேர்தல் நேரத்திலும் 'ஜரூர்'
மாநகராட்சி வரி பாக்கி வசூல் தேர்தல் நேரத்திலும் 'ஜரூர்'
மாநகராட்சி வரி பாக்கி வசூல் தேர்தல் நேரத்திலும் 'ஜரூர்'
ADDED : ஏப் 04, 2024 12:42 AM
கடலுார்: தேர்தல் நேரத்திலும், கடலுார் மாநகராட்சி சார்பில் வரி வசூல் தொடர்ந்து வருகிறது.
கடலுார் மாநகராட்சியில் வரி பாக்கி அதிகமாக உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் மாநகராட்சி பல்வேறு யுக்திகளை கையாண்டு வரி பாக்கியை வசூல் செய்து வருகிறது. வரி பாக்கி வைத்திருப்பவர்களது பெயர் பட்டியலை அச்சடித்து மக்கள் பார்வையில் படும்படி பேனராக வைத்துள்ளனர். கடப்பாறையுடன் சென்று கழிவு நீர் வெளியே வராமல் அடைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகராட்சியின் இதுபோன்ற கடும் நடவடிக்கை, தேர்தலில் ஆளுங்கட்சிக்கு பி்ன்னடைவை ஏற்படுத்தும் என, தி.மு.க., வினரே ஆதங்கப்பட்டனர்.
இந்நிலையில், தேர்தல் காரணமாக வரி பாக்கி வசூல் செய்வதை மாநகராட்சி ஒத்தி வைக்கும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மாநகராட்சி வரி வசூலை மீண்டும் முடுக்கியுள்ளது. தி.மு.க., கூட்டணியில் கடலுார் தொகுதி காங்., கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந் வேட்பாளர் ஓட்டு கேட்டு செல்லும் இடங்களில் இப்பிரச்னை எதிரொலிப்பதாக கூறப்படுகிறது.

