/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வை
/
ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வை
ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வை
ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வை
ADDED : மே 10, 2024 01:13 AM
கடலுார்: கடலுார் தேவணாம்பட்டினம் பெரியார் கல்லுாரியில் ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை (ஸ்ட்ராங் ரூம்) கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்து பல்வேறு மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு (இவிஎம்) இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதி முழுதும் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அக்னி வெயில் காரணமாக கடும் வெப்பம், திடீர் மழை, இடி மின்னல் போன்றவற்றால் சி.சி.டி.வி., பழுதாகி விடுகின்றன.
பல மாவட்டங்களில் இப்பிரச்னை பரபரப்பாக பேசப்படுகிறது. இதனால் அந்தந்த பகுதி அரசியல் பிரமுகர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் கடலுார் லோக்சபா தொகுதி ஓட்டுப்பெட்டிகள் பெரியார் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்த அறையை சுற்றி 6 சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளன. மின் தடை ஏற்பட்டாலும் இன்வெர்ட்டர் பேட்டரியில் கேமராக்கள் இயங்கும் படி அமைக்கப்பட்டுள்ளது.
இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டார். கண்காணிப்பு பணியில் எவ்வித பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என, கலெக்டர் அறிவுறுத்தினார்.