/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
/
பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
பார்வைத்திறன் குறைபாடுடையோர் பள்ளியில் கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 07, 2025 07:13 AM

கடலுார் : கடலுார் பார்வைத்திறன் குறைபாடு மாற்றுத்திறனாளிகள் அரசு தொடக்கப் பள்ளியில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
கடலுார் செம்மண்டலத்தில் பார்வைத்திறன் குறைபாடு மற்றும் மாற்றுத்திறனாளி அரசு தொடக்கப் பள்ளி 1968ல் துவங்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது 21 காது கேளாத மாணவர்கள், 10 பார்வைத்திறன் குறைபாடுடைய மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, உடை, காதொலி கருவி, கண்ணாடி, பிரெய்லி கைக்கடிகாரம், ஊன்றுகோல், தொடுதிரை கைபேசி போன்றவை வழங்கப்படுகிறது. இந்நிலையில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பள்ளியில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். விடுதி, சமையல் அறை, தங்கும் அறை, வகுப்பறை, பாடம் நடத்தும் முறைகள் போன்றவைகளை பார்வையிட்டார். பின்னர் பார்வையற்ற, காதுகேளாத மாற்றுத்திறனாளி சிறுவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது, பள்ளி மற்றும் விடுதி வளாகம் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, தலைமை ஆசிரியை ரூபியா ஜெனட் உடனிருந்தனர்.