/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் நவீன அரிசி ஆலையில் கலெக்டர், நிர்வாக இயக்குனர் ஆய்வு
/
சிதம்பரம் நவீன அரிசி ஆலையில் கலெக்டர், நிர்வாக இயக்குனர் ஆய்வு
சிதம்பரம் நவீன அரிசி ஆலையில் கலெக்டர், நிர்வாக இயக்குனர் ஆய்வு
சிதம்பரம் நவீன அரிசி ஆலையில் கலெக்டர், நிர்வாக இயக்குனர் ஆய்வு
ADDED : ஜூன் 03, 2024 05:00 AM

கடலுார், : சிதம்பரம் நவீன அரிசி ஆலையில் நடந்து வரும் புதுப்பித்தல் பணிகளை, கலெக்டர் மற்றும் நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் பார்வையிட்டனர்.
சிதம்பரம் பகுதியில் அரசு நவீன அரிசி ஆலை இயங்கி வருகிறது. இங்கு, அரவைப்பகுதி மற்றும் புதுப்பித்தல், செரிவூட்டப்பட்ட கலவை இயந்திரம் மற்றும் கருப்பு நீக்கும் இயந்திரம் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணிகளை கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக இயக்குனர் அண்ணாதுரை நேற்று ஆய்வு செய்தார். அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.