/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல்லிக்குப்பம் ஆலையில் கலெக்டர் திடீர் ஆய்வு
/
நெல்லிக்குப்பம் ஆலையில் கலெக்டர் திடீர் ஆய்வு
ADDED : ஆக 25, 2024 06:07 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் இருந்து கரித்துகள் வெளியேறி மக்கள் பாதிப்பதாக கூறப்பட்ட புகாரையடுத்து, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆலையில் திடீரென ஆய்வு செய்தார்.
நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் இருந்து கரித்துகள்கள் பறப்பதாலும், வெளியேறும் புகையால் மக்களுக்கு நுரையீரல் நோய்கள் ஏற்படுவதாக, பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
அதையடுத்து, நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் திடீரென ஆலையை ஆய்வு செய்தார். அப்போது கரித்துகள்கள் மற்றும் புகையால் மக்கள் பெரிதும் பாதிப்பதாக சேர்மன் ஜெயந்தி கலெக்டரிடம் கூறினார்.
ஆலையை சுற்றி ஆய்வு செய்த கலெக்டர் சுற்றுசூழல் பாதிப்பை உடனடியாக சரி செய்ய ஆலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சேர்மன் ஜெயந்தி, கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

