ADDED : மார் 28, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சி சார்பில், நுாறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, வண்ணக்கோலங்கள் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிதம்பரம் நகராட்சி வளாகத்தில், நுாறு சதவிகிதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி நகராட்சி வளாகத்தில், பெண்கள் பல்வேறு விழப்புணர்வு வாசகங்கள் அடங்கிய வண்ண கோலங்களை போட்டனர்.
அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. பொறியாளர் சுரேஷ், மேலாளர் செல்வி, டவுன் பிளானிங் அலுவலர் திருமுருகன், வருவாய் அலுவலர் பொன்னி, தொழில்நுட்ப உதவியாளர் நவீன், பணி ஆய்வர் ரம்யா, அலுவலர் உமா ராணி, பாத்திமா மற்றும் பலர் பங்கேற்றனர்.