ADDED : ஜூன் 11, 2024 11:47 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி துவங்கப்பட்டது.
கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட 10 தாலுகாக்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று 11ம் தேதி துவங்கி வரும் 27ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கடலுார் தாலுகாவில் நேற்று இம்முகாம் துவங்கியது.
சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை கலெக்டர் ரமா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். இதில், பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
அப்போது, தாசில்தார் பலராமன், குடிமை பொருள் தனி தாசில்தார் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.