/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் கொள்முதலுக்கு கமிஷன் விவசாயி தற்கொலை முயற்சி ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு
/
நெல் கொள்முதலுக்கு கமிஷன் விவசாயி தற்கொலை முயற்சி ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு
நெல் கொள்முதலுக்கு கமிஷன் விவசாயி தற்கொலை முயற்சி ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு
நெல் கொள்முதலுக்கு கமிஷன் விவசாயி தற்கொலை முயற்சி ஸ்ரீமுஷ்ணம் அருகே பரபரப்பு
ADDED : செப் 08, 2024 05:34 AM

சிதம்பரம்: ஸ்ரீமுஷ்ணம் அருகே கமிஷன் தராததால் நெல் கொள்முதல் செய்ய மறுத்ததால் மனமுடைந்த விவசாயி பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பாளையங்கோட்டை வடபாதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 54; விவசாயி.
இவரது வயலில் அறுவடை செய்த நெல்லை, வலசக்காடு கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்கு கொண்டு சென்றார்.
கொள்முதல் நிலைய ஊழியர்கள், மூட்டைக்கு ரூ.55 கமிஷன் கேட்டுள்ளனர். சந்தோஷ்குமார் மறுத்ததால், அவரது நெல்லை கொள்முதல் செய்யவில்லை என, கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் குமார், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவர் சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட செயலாளர் பிரகாஷ் மற்றும் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் இளங்கீரன் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அவரிடம் விசாரித்தனர்.
வளசக்காடு நெல் கொள்முதல் நிலையத்தில் நடைபெற்ற, இச்செயல் கண்டிக்கத்தக்கது. இதில் ஈடுபட்ட நெல் கொள்முதல் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.