ADDED : ஆக 02, 2024 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: மத்திய அரசை கண்டித்து விருத்தாசலத்தில் மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.
மத்திய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு, ஏழை நடுத்தர மக்கள் மீது கடும் தாக்குதல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளை வாரி வழங்கிய மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூ., சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
விருத்தாசலத்தில் மாவட்ட செயலாளர் துரை, மாவட்ட செயற்குழு கருப்பையன், மாநிலக்குழு தனவேல் தலைமையில் பாலக்கரையில் இருந்து தபால் அலுவலகம் வரை ஊர்வலமாக செல்ல முயன்ற அக்கட்சியினரை, இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சாலை மறியலில் ஈடுபட்ட 30 பெண்கள் உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.