/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
9,900 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
/
9,900 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : மார் 09, 2025 05:11 AM

கடலுார் : கடந்த 4 ஆண்டுகளில் 9,900 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது என, அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில். 220 கர்ப்பிணிளுக்கு சமுதாய வளைகாட்பு விழா கடலுார் வன்னியர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். எம்.பி., விஷ்ணுபிரசாத், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சிந்தனைச்செல்வன், மேயர் சுந்தரி ராஜா, கமிஷனர் அனு முன்னிலை வகித்தினர்.
அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்று பேசுகையில், கர்ப்பிணி பெண்கள் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாகவும் மனமகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக நமது பாரம்பரியத்தில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 9,900 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு விழா நடத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டு 900 பேருக்கு நடத்தப்பட உள்ளது.
சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வின்றி அனைவருக்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை ஏற்படுத்த, தமிழக அரசின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.பி., ஜெயக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் செல்வி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கோமதி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.