நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்னல் அமைக்கப்படுமா
சேத்தியாத்தோப்பு அடுத்த ஆணைவாரி பஸ்நிறுத்தம் அருகே நான்கு முனை சாலை சந்திக்கும் இடத்தில் விபத்துகளை தடுக்க போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும்.
கோவலன், ஆணைவாரி.
சுகாதார சீர்கேடு
விருத்தாசலம் பெரியார் நகரில் பன்றிகள் அதிகளவு உலவுவதால், மழை காலத்தில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கதிர்வேல், பெரியார் நகர்.
தெருநாய்களால் அச்சம்
பெண்ணாடம் போலீஸ் நிறுத்தம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் தெரு நாய்கள் சுற்றித்திரிவதால் பயணிகள், பாதசாரிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
ராஜாராமன், பெண்ணாடம்.