ADDED : ஜூலை 05, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
காத்திருப்போர் கூடம் பாழ் பாலுார் பல்லவராயநத்தம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள இறுதி சடங்கும் செய்யும் காத்திருப்போர் கூடம் வைக்கோல் அடுக்கி வைக்கும் இடமாக மாறி உள்ளது.
ராதாமணி, பாலுார்.
–
தேங்கி கிடக்கும் குப்பை தொட்டிகள் பண்ருட்டி அடுத்த பாலுார் பல்லவராயநத்தம் கிராமத்தில் வைக்க வேண்டிய குப்பை தொட்டிகள் ஊராட்சி மன்ற அலுவலகத்திலேயே தேங்கி கிடக்கிறது.
முத்துராமன், பாலுார்.
-
பஸ்களால் விபத்து அபாயம் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில் பஸ்களை தாறுமாறாக நிறுத்தி பயணிகளை இறக்கி விடுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
– பாண்டியன், விருத்தாசலம்.
