/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெசவாளர்கள் சங்க சொத்து விற்பனை தலைவர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
/
நெசவாளர்கள் சங்க சொத்து விற்பனை தலைவர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
நெசவாளர்கள் சங்க சொத்து விற்பனை தலைவர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
நெசவாளர்கள் சங்க சொத்து விற்பனை தலைவர் மீது எஸ்.பி.,யிடம் புகார்
ADDED : மார் 07, 2025 07:02 AM

கடலுார் : நடுவீரப்பட்டு நெசவாளர்கள் சங்கத்திற்கு சொந்தமான சொத்தை, விற்பனை செய்த சங்கத்தின் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்.பி.,யிடம் உறுப்பினர்கள் புகார் மனு அளித்தனர்.
இதுகுறித்து, நிர்வாகி தெய்வசிகாமணி தலைமையில் சங்க உறுப்பினர் 25 பேர், எஸ்.பி.,யை சந்தித்து அளித்த மனு விபரம்:
கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு கிராமத்தில் 36 பேர் உறுப்பினர்களாக கொண்ட நியூடான் பேப்ரிக் பெடரேஷன் என்ற நெசவாளர்கள் சங்கம் துவங்கப்பட்டது.
சங்கத்தின் பெயரில் உள்ள 20 சென்ட் இடத்தை, உறுப்பினர்கள் சம்மதம் பெறாமல், விற்பனை செய்வதற்கு, கடந்த 29.06.2020ல், சங்கத்தின் தலைவர் தரணி தீர்மானம் போட்டுள்ளார்.
உறுப்பினர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, தீர்மானத்தின் பேரில் நெல்லிக்குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரவு பதிவு செய்து, கண்டரக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார்.
மேலும், போலி ஆவணங்கள் மூலம், விற்பனை செய்யப்பட்ட இடத்திற்கு பட்டா மாற்றம் செய்ய தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
எனவே, சங்க உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, போலியான ஆவணங்கள் மூலம் சங்க இடத்தை விற்பனை செய்த தலைவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.