/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகள் மதிப்பதில்லை நகரமன்ற கூட்டத்தில் புகார்
/
அதிகாரிகள் மதிப்பதில்லை நகரமன்ற கூட்டத்தில் புகார்
அதிகாரிகள் மதிப்பதில்லை நகரமன்ற கூட்டத்தில் புகார்
அதிகாரிகள் மதிப்பதில்லை நகரமன்ற கூட்டத்தில் புகார்
ADDED : மார் 06, 2025 02:04 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்களை மதிப்பதில்லை என, புகார் தெரிவித்தனர்.
நெல்லிக்குப்பம் நகர மன்றகூட்டம் சேர்மன் ஜெயந்தி தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் கிரிஜா, கமிஷனர் கிருஷ்ணராஜன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் விவாதத்தில் முத்தமிழன் (தி.மு.க) பேசுகையில், கூட்டத்தில் அதிகாரிகளே அனைத்தையும் முடிவு செய்வதற்கு கவுன்சிலர்கள் எதற்கு, ஒப்பந்த பணி குறித்து கவுன்சிலர்களுக்கு தகவல் கொடுப்பதில்லை என புகார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஜெயபிரபா (தி.மு.க), 5 மாதத்துக்கு பிறகு கூட்டம் நடப்பதால் 123 தீர்மானங்கள் வந்துள்ளது.இனியாவது மாதந்தோறும் கூட்டம் நடத்த வேண்டும் என்றார். இக்பால் (ம.ம.க) பேசுகையில், மார்ச் முடியும் வரை பாக்கி இல்லாமல் வரி செலுத்தியவர்களுக்கு பாக்கி இருப்பதாக நோட்டீஸ் வழங்குகின்றனர்.
அதிகாரிகள் கவுன்சிலரை மதிப்பதில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட தி.மு.க., கவுன்சிலர் பூபாலன், தி.மு.க., ஆட்சியை தவறாக பேசக்கூடாது என, கவுன்சிலர் இக்பாலை ஒருமையில் பேசினார்.
இதை கண்டித்து இக்பால் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெளிநடப்பு செய்த கவுன்சிலருக்கு ஆதரவாக சில கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பேசிய சேர்மன் ஜெயந்தி, அதிகாரிகள் அலட்சியத்தால் எனக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது என்றார்.