/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு: நெல்லிக்குப்பத்தில் விற்பனை
/
குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு: நெல்லிக்குப்பத்தில் விற்பனை
குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு: நெல்லிக்குப்பத்தில் விற்பனை
குப்பையில் இருந்து உரம் தயாரிப்பு: நெல்லிக்குப்பத்தில் விற்பனை
ADDED : மே 27, 2024 05:40 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் குப்பையில் இருந்து தயாரித்த உரத்தை வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலம் தினமும் துாய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்து வருகின்றனர். அவற்றை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரிக்கின்றனர். மக்காத பிளாஸ்டிக் பைகளை இயந்திரம் மூலம் பண்டல்களாக கட்டி சிமென்ட் கம்பெனிக்கு அனுப்புகின்றனர்.
மக்கும் குப்பையை இயந்திரத்தில் அறைத்து பத்து நாட்களுக்கு மேல் தொட்டியில் போட்டு மக்க வைக்கின்றனர். அதன்பிறகு அதனை உரமாக்குகின்றனர். இந்த இயற்கை உரத்தை குறைந்த விலைக்கு விவசாயிகளுக்கு வழங்குகின்றனர். மேலும் கமிஷனர் கிருஷ்ணராஜன் உத்தரவின்பேரில், உரம் விற்பனையை அதிகரிக்க நேரடியாக வீடுகளுக்கே சென்று ஒப்பந்த பணியாளர்கள் விற்பனை செய்கின்றனர்.
2 கிலோ உரத்தை 30 ரூபாய்க்கு விற்கின்றனர். உரம் தரமாக இருப்பதால் மக்களும் விரும்பி வாங்குகின்றனர். இந்த புதிய முயற்சியால் நகராட்சிக்கும் வருவாய் கிடைக்கிறது.