/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் பறிமுதல்
/
அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் பறிமுதல்
அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் பறிமுதல்
அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்கள் பறிமுதல்
ADDED : ஆக 26, 2024 09:24 AM

கடலுார் : கடலுார் அருகே பட்டாசு தயாரிக்க, இரு இடங்களில் அனுமதியின்றி வைத்திருந்த வெடி பொருட்களை வருவாய்த்துறை மற்றும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலுார் அடுத்த நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ரமேஷ், 38; இவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசு தயாரிக்க வெடி பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக கடலுார் துறைமுகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தாசில்தார் பலராமன் மற்றும் முதுநகர் இன்ஸ்பெக்டர் ரேவதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அங்கு 10 சாக்கு மூட்டைகளில் 120 கிலோ எடை கொண்ட அவுட் வெடி தயாரிப்பதற்கான வெடிபொருட்கள் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வெடி பொருட்களை வருவாய்த்துறை மற்றும் போலீசார் பறிமுதல் செய்து, பதுக்கி வைத்திருந்த கொட்டகைக்கு சீல் வைத்தனர். மேலும், தீயணைப்பு துறை மூலம் வெடி பொருட்களின் மதிப்பு குறித்து கணக்கீடு செய்து வருகின்றனர்.
இது குறித்து ரமேஷ் உள்ளிட்ட மூவர் மீது கடலுார் துறைமுகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதே போல், கடலுார் அடுத்த எம்.புதுாரைச் சேர்ந்த ஜிந்தா,34; என்பவர் வீட்டின் அருகே குடோனில், அனுமதியின்றி வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தி அனுமதியின்றி 50 கிலோ வெடிப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து ஜிந்தாவை கைது செய்து, வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர்.