/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் தொகுதி ஓட்டுப்பதிவு சதவீதம் 3வது முறையாக மாற்றப்பட்டதால் குழப்பம்
/
சிதம்பரம் தொகுதி ஓட்டுப்பதிவு சதவீதம் 3வது முறையாக மாற்றப்பட்டதால் குழப்பம்
சிதம்பரம் தொகுதி ஓட்டுப்பதிவு சதவீதம் 3வது முறையாக மாற்றப்பட்டதால் குழப்பம்
சிதம்பரம் தொகுதி ஓட்டுப்பதிவு சதவீதம் 3வது முறையாக மாற்றப்பட்டதால் குழப்பம்
ADDED : ஏப் 23, 2024 05:42 AM
சிதம்பரம், : சிதம்பரம் லோக்சபா தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீதம் மூன்று முறை திருத்தப்பட்டதால், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர்.
சிதம்பரம் லோக்சபா தொகுதியில் கடலுார் மாவட்டத்திற்குட்பட்ட சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், அரியலுார் மாவட்டத்தில் அரியலுார், ஜெயங்கொண்டம் , பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் அடங்கியுள்ளது.
கடந்த 19ம் தேதி நடந்த தேர்தல் அன்று, கடும் வெயில் காரணமாக, மாலையில் அதிகமானோர் ஒட்டுப்போட வந்தததால், ஓட்டுப்பதிவு நேரம் முடிந்த பிறகும் 7:30 மணி வரை, சில ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.
இதனால், ஓட்டுப்பதிவு சதவீதம் கணக்கிடுவதால் தாமதம் ஏற்பட்டது. இரவு 9:00 மணிக்கு மேல் சிதம்பரம் தொகுதியில் ஓட்டுப்பதிவு சதவீதம் ௭4.87 என, தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தமிழக அளவில் அறிவிக்கப்பட்ட ஓட்டு சதவீதம் அடிப்படையில் சிதம்பரம் தொகுதியில் 74.87 என அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பின்னர் அன்று இரவு 11:45 மணியளவில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஓட்டுப்பதிவு சதவீதம் மாற்றப்பட்டு, 75.32 தேர்தல் ஆணையம் திருத்தி வெளியிட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (21ம் தேதி) மீண்டும் 3 வது முறையாக, சிதம்பரம் தொகுதி ஓட்டுப்பதிவு சதவீதம் மாற்றப்பட்டு, 76.37 என, அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சில தொகுதிகளில் ஓட்டுப்பதிவு சதவீதம் ஒன்றிரண்டு முறை மாற்றப்பட்ட நிலையில், சிதம்பரம் தொகுதியில் மூன்றாவது முறையாக மாற்றப்பட்டது, அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களை பெரிதும் குழப்பமடைய செய்தது.

