/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கால்வாய் பணி தடுத்து நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
/
கால்வாய் பணி தடுத்து நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
கால்வாய் பணி தடுத்து நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
கால்வாய் பணி தடுத்து நிறுத்தம் ஸ்ரீமுஷ்ணத்தில் பரபரப்பு
ADDED : ஜூலை 26, 2024 04:37 AM

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி அலுவலகம் முதல் ஆரம்ப சுகாதார நிலையம் வரையில், நெடுஞ்சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பணி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், நேற்று தெற்கு ரத வீதியில் பணிகள் துவங்கியது. அப்போது அங்கு வந்த பேரூராட்சி சேர்மன் செல்வி ஆனந்தன், துணைத் தலைவர் முத்தமிழரசி மற்றும் தி.மு.க., - அ.தி.மு.க., - வி.சி., உள்ளிட்ட கட்சி களை சேர்ந்த கவுன்சிலர்கள், பணியை தடுத்து நிறுத்தினர்.
நகரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை முழுவதுமாக அகற்றிய பின்னர் கால்வாய் அமைக்கும் பணியை மேற்கொள்ள கூறினர். அதையடுத்து பணிகள் நிறுத்தப்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.