ADDED : ஜூலை 01, 2024 06:38 AM
மந்தாரக்குப்பம்: வாகனங்களின் நம்பர் பிளேட்டில் டிசைன் வடிவில் எழுத்துக்களால் குழப்பம் ஏற்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் உள்ள எண்கள் தெளிவாக தெரியும் வகையில் இருக்க வேண்டும் என போக்குவரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் பெரும்பலான வாகனங்களில் நம்பர் பிளேட்டுகளில் தங்களது பெயர்கள், குழந்தைகள் பெயர்கள், மற்றும் கட்சி தலைவர்கள் படங்கள் இடம் பெற்று உள்ளதால் சாலை விபத்துக்கள் ஏற்படும் போது வாகனங்களின் பதிவு எண்கள் சிறிய எழுத்துக்களால் இருப்பதால் கண்டுபிடிப்பதில் கடும் சிரமம் ஏற்படுகிறது.
எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.