/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
கராத்தே போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 03, 2024 06:11 AM

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி எஸ்.டி.சீயோன் மெட்ரிக் பள்ளியில் ஒகேனவா கோஜி கராத்தே பயிற்சி பள்ளி சார்பில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, பெல்ட் வழங்கும் விழா நடந்தது.
பள்ளி இயக்குனர் தீபாசுஜின் தலைமை தாங்கினார். உடற்கல்வி ஆசிரியர் சத்தியராஜ் முன்னிலை வகித்தார். சென்சாய் ரங்கநாதன் வரவேற்றார்.
பள்ளி தாளாளர் சாமுவேல் சுஜின், அரிமா சங்க மணிமாறன், சவுந்தரராஜன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, கராத்தே பெல்ட் வழங்கினர். சிதம்பரம், ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, வடலுார், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, விருத்தாசலம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
பயிற்சியாளர்கள் இளவரசன், ஷர்மா, ரவிக்குமார், பிரத்தியுனன், சத்தியமூர்த்தி, கிேஷார், சுபாஷினி, ராஜ்கிரண், தென்னரசன், நந்தினி பங்கேற்றனர். ஷர்மா நன்றி கூறினார்.