ADDED : செப் 15, 2024 07:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட காங்., சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் நேர்காணல் நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட தலைவர் திலகர் தலைமை தாங்கினார். நகர தலைவர் ரவிக்குமார் வரவேற்றார். சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் முகமது ஆரீப் பேசுகையில்,தொண்டர்களை தேடி தலைவர்கள் வந்த வரை கட்சி நன்றாக இருந்தது. தலைவர்களை தேடி தொண்டர்கள் வர ஆரம்பித்ததும் கட்சி வளர்ச்சி குறைந்தது. இதை சரி செய்யவே தற்போது தொண்டர்களை தேடி தலைவர்கள் வருகிறார்கள். இரண்டாவது சுதந்திர போராட்டம் ராகுல் தலைமையில் பா.ஜ.,வுக்கு எதிராக தொடங்கியுள்ளோம் என்றார்.
மாநில துணைத் தலைவர் குலாம்நபி, தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் மீரான் உசேன், பாரூக், அக்பர் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.