ADDED : ஜூலை 25, 2026 08:44 PM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் காமராஜர் சிலை அருகில் மாநகர காங்., சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர காங்., தலைவர் வேலுசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கிஷோர், காமராஜ், தொகுதி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார தலைவர்கள் ராஜா, ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், ராஜேஷ், ஆறுமுகம், ஆனந்தன், ஓ.பி.சி., அணி ராமராஜ், மகளிரணி சாந்தி, ராஜ்குமார், வர்த்தக பிரிவு சிவக்குமார், எஸ்.சி.,–எஸ்.டி., பிரிவு வேலு, முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
