ADDED : ஜூலை 26, 2026 05:01 PM
சிதம்பரம்: சிதம்பரத்தில், கடலுார் தெற்கு மாவட்ட காங்., கமிட்டி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மெழுகு வத்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக நடைபெற்ற, போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள், காங்., தலைவர்கள், தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசை கண்டித்து, மெழுகுவத்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். நகர தலைவர் தில்லை மக்கீன் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் ராஜா. சம்பத்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், சாம்பமூர்த்தி, குமராட்சி ரங்கநாதன், வட்டார தலைவர்கள் சுந்தராஜன், செழியன், அபுபக்கர், வைத்தியநாதசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி பங்கேற்று கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வேங்கடகிரி, பழனி, குமார், தில்லை குமார், சின்ராஜ், நெல்சன், மகளிரணி அஞ்சம்மாள் உள்ளிட்ட பலர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
