ADDED : மார் 31, 2024 03:55 AM

அ நிறம் | அளவு
விருத்தாசலம், : மத்திய அரசை கண்டித்து, விருத்தாசலத்தில் காங்., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய காங்., கமிட்டிக்கு வரி மற்றும் அபராதமாக 1,823 கோடி ரூபாய் செலுத்தக் கோரி, வருமான வரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பிய மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகர தலைவர் ரஞ்சித்குமார் உட்பட மகளிரணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
